/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை பசுமையாக்க மரக்கன்று நடும் பணி துவக்கம்
/
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை பசுமையாக்க மரக்கன்று நடும் பணி துவக்கம்
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை பசுமையாக்க மரக்கன்று நடும் பணி துவக்கம்
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை பசுமையாக்க மரக்கன்று நடும் பணி துவக்கம்
ADDED : பிப் 04, 2025 06:00 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை மைதானத்தை பசுமையாக்கும் பணி துவக்கப்பட்டது. முதற்கட்டமாக தாகூர் கலை கல்லுாரி மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் இருபுறமும் ஏராளமான அடர்ந்த மரங்கள் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் காலை மற்றும் மாலை நேரங்களில் இயற்கையை ரசித்தபடி நடைபயிற்சி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் வீசிய பெஞ்சல் புயலில், ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் இருந்த ஏராளமான மரங்கள் அடியோடு விழுந்தன. இதனால், அப்பகுதி தற்போது பசுமை இழந்து காணப்படுகிறது.
அந்த இடங்களில், மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் பணியை சமூக பங்களிப்புடன்'தினமலர்' நாளிதழ் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக தாகூர் கல்லுாரி மைதானத்தில் பசுமையாக்கும் பணி நேற்று நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங் கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தாகூர் கலைக்கல்லுாரி மைதானத்தில் பூவரசம், இலுப்பை, மகுடன், சிவந்தேனியா உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில், 'ஆரோக்கியமான வாழ்க்கை சூழலுக்கு துாய்மையான காற்றை அளிக்கும் காடுகள் அவசியம். காடுகள் நம் வாழ்வியலில் ஒரு அங்கம்.
ஆனால் புதுச்சேரியில் வனப்பரப்பு குறைவாக உள்ளது. ஆனால் காடுகளை உருவாக்க புதுச்சேரியில் போதிய நிலப்பரப்பு இல்லை.
எனவே கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் நட்டு நாம் அனைவருமே புதுச்சேரியின் பசுமை சூழலை அதிகரிக்க வேண்டும். புதுச்சேரி அரசும் அதற்கான முயற்சியை எடுத்துள்ள நிலையில் பொதுமக்களும் தங்களுடைய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து குறுங்காடுகளாக மாற்ற வேண்டும்' என்றார்.
தாகூர் அரசு கல்லுாரி மைதானம் மட்டுமின்றி ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் விரைவில் நடப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் துளசி பவுண்டேசன் சேர்மன் மதிவாணன், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், லாஸ்பேட்டை பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.