/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்பார்ஷ் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க முப்படை ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
/
ஸ்பார்ஷ் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க முப்படை ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
ஸ்பார்ஷ் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க முப்படை ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
ஸ்பார்ஷ் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க முப்படை ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 19, 2024 01:59 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் 'ஸ்பார்ஷ்' சிறப்பு கூட்டத்தில், முப்படை ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என, முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரகுமரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பாதுகாப்புத்துறை ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதிய பயனாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, சென்னை, தேனாம்பேட்டை பாதுகாப்புத்துறை கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் சிறப்பு விளக்கக்கூட்டத்தை வரும் 21ம் தேதி காலை 9:00 மணிக்கு, ஜிப்மர் கலையரங்கில் ஏற்பாடு செய்துள்ளார்.
கூட்டத்தை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைக்கிறார். கூட்டத்தில், எம்.ஆர்.சி., எம்.இ.ஜி., மற்றும் டி.எஸ்.சி., துறை பதிவு அலுவலகங்களின் அதிகாரிகள் ஓய்வூதியம் சம்மந்தமாக உதவி செய்ய உள்ளனர்.
இந்த கூட்டமானது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளான, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட 'ஸ்பார்ஷில்' இணைந்துள்ள பாதுகாப்புத்துறை ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், இந்த ஸ்பார்ஷ் சிறப்பு கூட்டத்தில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, ஓய்வூதியம் சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.