/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லறை திருநாள் கிறிஸ்துவர்கள் அஞ்சலி
/
கல்லறை திருநாள் கிறிஸ்துவர்கள் அஞ்சலி
ADDED : நவ 03, 2024 05:44 AM

புதுச்சேரி: கிறிஸ்துவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா, நேற்று புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, முன்னோர்களின் கல்லறையை, அவரது குடும்பத்தார் பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது. கல்லறைகள் பாதிரியார்களால் ஜெபிக்கப்பட்டன.
புதுச்சேரியில் உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை திருநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்லறை திருநாளையொட்டி, நேற்று ரோஜா, புளுடெய்லி, சமாந்தி, மல்லி, அரளி, ஆஸ்ட்ரெஸ் பூக்கள் விற்பனையும் களை கட்டியது.
கல்லறை திருவிழாவையொட்டி, கல்லறை தோட்டம் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.