ADDED : நவ 07, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, முன் மழலையர் பராமரிப்பு வகுப்பறை திறப்பு, உணவு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ராஜவேணி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் அனிதா முப்பெரும் விழாவை துவக்கி, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜ்குமார், ராஜேஷ், கன்னியம்மா, தமிழ்மலர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

