தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : செப் 05, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை, ரெயின் கோட் வழங்குதல் மற்றும் ஆசிரியர் தின விழா என, முப்பெரும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் அருள் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,  கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சீருடை மற்றும் ரெயின் கோட் வழங்கினார். தொடர்ந்து, அவர்,  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

விழாவையொட்டி, ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றன. தமிழ் விரிவுரையாளர் புனிதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us