ADDED : மார் 07, 2026 05:28 AM

புதுச்சேரி: சேதராப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் விழா, கற்றல் கற்பித்தல் பொருட்களின் கண்காட்சி மற்றும் முன்மழலையர் தினவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா தலைமை தாங்கி கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
மாணவர்களின் வாசிப்புத்திறன், கணித அறிவு மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான கற்றல் கற்பித்தல் உபகரணங்களை மாநில திட்ட இயக்குநர் பார்வையிட்டுப் பாராட்டினார்.
தொடர்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் புத்தகங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் 5ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் ஹேமமாலினி, அரசு மேனிலைப்பள்ளி துணை முதல்வர் உமா, ஆசிரியர் கவுசல்யா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சரிதா நன்றி கூறினார்.
