/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகர் தொகுதியில் முப்பெரும் விழா
/
காமராஜர் நகர் தொகுதியில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 17, 2025 12:43 AM

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா, காமராஜர் நகர் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கல் என, முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, காங்., அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொகுதி காங்., அனைத்து பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.