/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
த.வெ.க., ஆனந்த் மீண்டும் முதல்வருடன் சந்திப்பு
/
த.வெ.க., ஆனந்த் மீண்டும் முதல்வருடன் சந்திப்பு
ADDED : டிச 04, 2025 05:15 AM
புதுச்சேரி: த.வெ.க., விஜய் 'ரோடு ேஷா' விற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேற்று மீண்டும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
த.வெ.க., தலைவர் விஜய் நாளை 5ம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ேஷா' நடத்த அனுமதி கோரி கடந்த 26ம் தேதி டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நீண்ட ஆலோசனைக்கு பின் நேற்று முன்தினம் 'ரோடு ேஷா' அனுமதி மறுத்த போலீசார், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினர்.
இந்நிலையில் த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த், நேற்று மதியம் சட்டசபையில் முதல்வரை சந்தித்து, இ.சி.ஆரில், சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை 1.5 கி.மீ., துாரத்திற்கு மட்டும் 'ரோடு ேஷா' நடத்திட அனுமதி கோரினர். அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், ரோடு ேஷா'விற்கு எக்காரணம் கொண்டு அனுமதி தர முடியாது என, திட்ட வட்டமாக மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்த இரு இடங்களை தெரிவித்துவிட்டு சென்றார்.

