த.வெ.க., வேட்பாளர் ராமு நோணாங்குப்பத்தில் பிரசாரம்
த.வெ.க., வேட்பாளர் ராமு நோணாங்குப்பத்தில் பிரசாரம்
ADDED : மார் 30, 2026 06:53 PM

அரியாங்குப்பம்: நோணாங்கப்பத்தில் சுண்ணாம்பாறு நீர் உட்புகாதவாறு ஆற்றுப்படுகை அணையை உயர்த்தி தருவதாக, மணவெளி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராமு வாக்குறுதி அளித்தார்.
மணவெளி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராமு, நோணாங்குப்பம் பகுதியில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் நோணாங்குப்பத்தில் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். அதிக கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தருவேன். முக்கிய பிரச்னையாக உள்ள சுண்ணாம்பாற்றில் இருந்து தண்ணீர் உட்புகாதவாறு ஆற்றுப்படுகை அணையை உயர்த்தி அமைக்கப்படும்.
தரமான சிமென்ட் சாலை போடப்பட்டு, மின் பஸ் சேவையை மீண்டும் துவக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், அடிப்படை வசதியான வடிகால் வாய்க்கால் மற்றும் நுாலகம் கட்டி தருவேன் எனவும், வரும் தேர்தலில், விசில் சின்னத்தில் ஓட்டு அளித்து, என்னை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கேட்டு ஓட்டு சேகரித்தார்.
