ADDED : ஜன 27, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி நேற்று மாலை 5:30 மணியளவில் டொயோட்டா எட்டியாஸ் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அரியாங்குப்பம் ஐயப்பன் கோவில் அருகே சென்றபோது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக கார் மோதியது.
காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

