அஜிஸ் நகரில் த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் தீவிர ஓட்டு சேகரிப்பு
அஜிஸ் நகரில் த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி அஜிஸ் நகரில் த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உழவர்கரை தொகுதியில் த.வெ.க., சார்பில் வேட்பாளர் சசிபாலன் போட்டியிடுகிறார். இவர் நேற்று அஜிஸ் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் வழங்கி, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வேட்பாளர் சசிபாலன் அப்பகுதி மக்களிடம் தான் செய்த மக்கள் நலப்பணிகளை எடுத்து கூறினார்.
தனக்கு வாய்பு தந்தால் உழவர்கரை தொகுதியை மாநிலத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன், என்றார். ஓட்டு சேகரிப்பின் போது, த.வெ.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
