என்.எம்.கே., வேட்பாளரை ஆதரித்து த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
என்.எம்.கே., வேட்பாளரை ஆதரித்து த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
ADDED : ஏப் 05, 2026 06:43 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்தார்.
த.வெ.க., தலைவர் விஜய் நேற்று தட்டாஞ்சாடி மார்க்கெட் கமிட்டி மைதானத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து வேட்பாளர் விநாயகம் கூறுகையில், 'த.வெ.க., வுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் நேயம் மக்கள் கழகம் போட்டியிடுகிறது. தொகுதி முழுதும் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியில் சுத்தமான குடிநீர் மற்றும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வழி வகை செய்வேன்.
தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொகுதி மக்கள் சந்திக்கலாம்' என்றார்.
