ADDED : டிச 27, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக் கள் முன்னேற்ற கழகம் சார்பில், சுனாமி நினைவு தினத்தையொட்டி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரை மணலில், சுனாமி நினைவு சின்னம் அமைத்து சுனாமியில் இறந்தவர்களுக்கு, கழகத்தின் தலைவர் ராமதாஸ் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர், கடலில், மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், துணை தலைவர் நித்தியானந்தம், பொருளார் செல்வகுமாரி, செயலாளர்கள் பரந்தாமன், ரவிக்குமார், மோகனசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

