தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் விழிப்புணர்வு மாரத்தான்

 காசநோய் விழிப்புணர்வு மாரத்தான்

 காசநோய் விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : மார் 29, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காசநோய் விழிப்புணர்வு மாராத்தான் நேற்று நடந்தது.

மத்திய காசநோய் பிரிவு, உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 21 கிராமங்கள் உட்பட நாடு முழுதும் 1.58 லட்சம் கிராமங்களில் காசநோய் இல்லாத பாரத இயக்கம் 100 நாள் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், மாநில காசநோய் மையம், அரசு மார்பு நோய் நிலையம் மற்றும் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியின் சமூக மருத்துவ துறை சார்பில், காசநோய் இல்லாத பாரத இயக்கம் 100 நாட்கள் விழிப்புணர்வு பிரசார மாரத்தான் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் கொடியசைத்து விழிப்புணர்வு மாரத்தானை துவக்கி வைத்தார். இதில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று, காசநோய் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கி இந்த மாரத்தான், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி வழியாக சென்று மீண்டும் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us