தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

 காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

 காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 19, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்லுாரி மாணவர்களின் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

முதுநிலை மருத்துவர் பத்மினி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 'காச நோய் ஒழிப்போம், தேசம் வெல்லும்' முழக்கத்துடன் மாணவர்கள் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு மற்றும் விமான நிலையச் சாலை வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின், கல்லுாரி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், பெண் சுகாதார பார்வையாளர் ராதாமுத்து வரவேற்றார்.

டாக்டர் பத்மினி காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காசநோய் சுகாதாரப் பார்வையாளர் மீரா, 'காச நோய் இல்லாத பாரதம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us