/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்
/
அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்
அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்
அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்
ADDED : டிச 31, 2024 05:58 AM

திருபுவனை: திருபுவனை அடுத்த நல்லுார் அரசு ஆரம்பப் பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 'காசநோய் இல்லா புதுச்சேரியை உருவாக்கிட 100 நாள் காச நோய் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த முகாம் நடந்தது. திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஐஸ்வர்யா, மதகடிப்பட்டு துணை சுகாதார நிலைய டாக்டர் ராம்பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் ஆகியவை காசநோயின் அறிகுளிகளாகும்.
நீரிழிவு நோயாளிகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், உடல் மெலிந்து உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள், காச நோய்க்கு சிகிச்சை எடுக்காதவர்கள், காசநோய் பாதிக்கப்பட்டவரோடு வசிப்பவர்கள் ஆகியோருக்கு காசநோய் பாதிப்பிற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனேவே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து இலவச பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.