/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் காசநோய் மார்பக பரிசோதனை முகாம்
/
வில்லியனுாரில் காசநோய் மார்பக பரிசோதனை முகாம்
ADDED : ஜன 21, 2025 06:39 AM

புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 100 நாள் காசநோய் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் இலவச மார்பக எக்ஸ்ரே பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கினார்.
உலக சுகாதார அமைப்பின் பார்வையாளர் டாக்டர் ரோடெரிகோ ஆப்ரின் தலைமையில் தேசிய காசநோய் திட்ட அதிகாரி ரஞ்சனி ராமச்சந்திரன், மாநில திட்ட அதிகாரி வெங்கடேஷ்,மினிதா, சாய்ரா பானு, கவிதா வாசுதேவன், துறை தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் காசநோய் ஒழிப்பு 100 நாட்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவ அதிகாரி சந்திரசேகர், வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஞான செல்வி, காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா கிராமப்புற செவிலியர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, முக ஓவியம் நடந்தது.
மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி மாணவ,மாணவிகளின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.