/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 06, 2024 05:18 AM
புதுச்சேரி : காசநோய் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்தியாவில் காசநோய் அதிகம் பாதிக்கப்பட்டமாவட்டங்களை கண்டறிந்து, காச நோயை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிட்டுள்ளது. புதிய நோய், பாதிப்புகள் ஏற்படுவதை தடுப்பது, காசநோய் உள்ளவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது, இதன் நோக்கமாகும். இது தொடர்பாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் ஆலோசனை கூட்டம், இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
சுகாதார இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கினர். மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், டாக்டர் ரவி உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.