sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் பரிசோதனை முகாம்

 காசநோய் பரிசோதனை முகாம்

 காசநோய் பரிசோதனை முகாம்

1


ADDED : ஏப் 16, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 11:11 PM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் 'இல்லம் தேடி எக்ஸ்ரே, சுகமான சுவாசம், வளமான வாழ்வுக்கு வழி' என்ற நோக்கில் 100 நாள் காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

முகாமிற்கு, டாக்டர் குறிஞ்சிசெல்வன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களுக்கு மார்பக எக்ஸ்ரே, சளி, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உயரம் மற்றும் எடை, ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில், 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

ஏற்பாடுகளை காசநோய் சுகாதார பார்வையாளர் பொற்கிலை, மகப்பேறு உதவியாளர் அம்பிகா, ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us