/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
/
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
ADDED : டிச 28, 2025 05:45 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கடற்கரை பகுதி யில், ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. இந்த ஆமைகள் முட்டையிடுவதற்காக நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் கடற்கரைக்கு வரும்.
அவ்வாறு வரும் ஆமைகள் துரதிஷ்டவசமாக கப்பல், மீன்படி படகு மற்றும் வலையில் சிக்கி காயமடைந்து இறந்து விடும் சம்பவம் நடந்து வருகிறது.
தற்போது, புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமைகள் முட்டை இடுவதற்காக வரத்துவங்கி உள்ளன.
இந்நிலையில், கிருமா ம்பாக்கம் அருகே உள்ள மூ.புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் சுமார் 25 கிலோ எடை கொண் ட ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கி கிடந்தது.
அப்பகுதி மீனவர்கள் இது குறித்து மீன்வளம் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

