தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ த.வெ.க., தலைவர் விஜய் 4 இடங்களில் பிரசாரம்

 த.வெ.க., தலைவர் விஜய் 4 இடங்களில் பிரசாரம்

 த.வெ.க., தலைவர் விஜய் 4 இடங்களில் பிரசாரம்


ADDED : ஏப் 03, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் த.வெ.க., தலைவர் விஜய் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க., தலைவர் விஜய் ஏப்ரல் 4 ம் தேதியன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக போலீஸ்துறையிடம் புதுச்சேரி த.வெ.க., வினர் அனுமதி கோரியிருந்தனர். போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர்.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ​கொக்கு பார்க், ​வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம்,​ தவளக்குப்பம் சந்திப்பு, ​வில்லியனுார் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் மட்டும் த.வெ.க., தலைவர் விஜய் வேனில் நின்று பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை பிரசாரம் செய்யவேண்டும்.

பிரசாரத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். தமிழகத்திலிருந்து ரசிகர்கள், தொண்டர்கள் வர போலீசார் தடை விதித்துள்ளனர். ஒரு இடத்தில் 2,000 பேருக்கு மேல் கூடக்கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.​ ஒவ்வொரு பிரசார இடத்திலும் ஆம்புலன்ஸ், குடிநீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக இருக்க வேண்டும். பிரசார வேனைத் தொண்டர்கள் வாகனங்களில் பின்தொடரக் கூடாது. போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கான ஏற்பாட்டை த.வெ.க.,வினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us