/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
/
போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : செப் 07, 2025 11:13 PM
புதுச்சேரி: புதுச்சேரி, ஆலங்குப்பம் தனியார் ஓயின்ஷாப் அருகே 2 வாலிபர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக டி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு தகராறில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துள்ளனர்.
அப்போது, மதுபோதையில் இருந்த இருவரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறில் ஈடுபட்டதுடன், தாக்க முயன்றனர்.இதையடுத்து, இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதி, 29;அஜய், 31; என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏட்டு ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், டி-நகர் போலீசார் இருவர் மீதும் பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதாக வழக்குப் பதிந்து கைது செய்தனர்.