/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு இருவர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு இருவர் கைது
ADDED : ஏப் 22, 2025 04:40 AM
புதுச்சேரி: பொது இடத்தில் பொதுமக்களிடம் தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை சி.வி., சாலை அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், பாகூரை சேர்ந்த தர்மசீலன், 24, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல, காலாப்பட்டு சாலையில், காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம், ரோந்து பணி சென்றனர். கனகசெட்டிக்குளம் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தகராறில் ஈடுபட்ட, திண்டிவனம் அடுத்த கோமுட்டிசாவடி பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம்,41, என்பவரை போலீசார் கைது செய்தனர்.