தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜே.சி.பி., ஆப்பரேட்டர் கொலை: விழுப்புரம் அருகே இருவர் கைது

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் கொலை: விழுப்புரம் அருகே இருவர் கைது

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் கொலை: விழுப்புரம் அருகே இருவர் கைது


UPDATED : ஜூலை 06, 2026 06:01 PM

ADDED : ஜூலை 06, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 06:01 PM ADDED : ஜூலை 06, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜே.சி.பி., ஆப்பரேட்டரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மாதிரிமங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 56; ஜே.சி.பி., ஆபரேட்டர். எரிச்சனாம்பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து, 33; லாரி டிரைவர். நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதும் வழக்கம்.

ஜூலை 5 இரவு 7:00 மணிக்கு மாதிரிமங்கலம் சமுதாயக்கூடம் அருகே இருவரும் மது அருந்தினர்.

அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூர்த்தியின் உறவினரான வினோத்துக்கும், வீரமுத்துவிற்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது.

தகராறை மூர்த்தி விலக்கி விட்டார். மூர்த்தி, தனக்கு ஆதரவு தராததால் ஆத்திரமடைந்த வீரமுத்து, சிறுவள்ளிக்குப்பத்தை சேர்ந்த தனது நண்பரான கட்டட தொழிலாளியான மோகன்ராஜ், 25; என்பவரை மொபைல் போனில் பேசி வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த மோகன்ராஜ், வீரமுத்துவுடன் சேர்ந்து, தனியாக இருந்த மூர்த்தியை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார், மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மூர்த்தியின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், வீரமுத்து, 33; மோகன்ராஜ், 25; ஆகியோர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us