ADDED : அக் 09, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண்களை கேலி செய்த தனியார் பஸ்களின் டிக்கெட் பரிசோதகர்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். அப்போது, வழுதாவூர் சாலையில் சென்ற தனியார் பஸ்சில் ஏறி சோதனை செய்தனர். அப்போது பெண் பயணிகளை கேலி செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், புதுச்சேரி, தர்மபுரி, சவரி நகரைச் சேர்ந்த வினோத்குமார்,25; என்பதும், அதே பஸ்சில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருவது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வினோத் குமாரை கைது செய்தனர்.
இதேபோல், மேட்டுப்பாளையம் சாராயக்கடை அருகே அவ்வழியாக சென்ற பெண்களை கேலி செய்த விழுப்புரம், ராதாபுரத்தை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் மணிவண்ணன்,33; என்பவரை கைது செய்தனர்.

