/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா விற்பனை செய்த இரண்டு பேர் கைது
/
குட்கா விற்பனை செய்த இரண்டு பேர் கைது
ADDED : ஏப் 15, 2025 04:32 AM

நெட்டப்பாக்கம்: சூரமங்கலத்தில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை சூரமங்கலம், கரியமாணிக்கம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, கரியமாணிக்கம் மற்றும் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளரான சூரமங்கலம் கல்யாணம் மண்டபம் தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி 30, கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த சக்கரபாணி 43, ஆகியோரை கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.