ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, நெல்லித்தோப்பு, பாண்டி– விழுப்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
அந்த கடையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர்கள் கோட்டகுப்பம், பஜார் தெருவை சேர்ந்த அக்பர், 50; காராமணிகுப்பம், பூந்தோட்டத் தெருவை சேர்ந்த செல்வராஜ், 71; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
