/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது அமர்ந்தவரை வெட்டி கொன்ற இருவர் கைது
/
பைக் மீது அமர்ந்தவரை வெட்டி கொன்ற இருவர் கைது
ADDED : ஜூன் 18, 2025 02:42 AM

கண்டமங்கலம்:புதுச்சேரி, திருக்கனுார் போலீசார், ஜூன் 15ம் தேதி வாகன சோதனையின் போது, சாக்கு மூட்டையுடன் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும், பைக், சாக்குமூட்டையை போட்டுவிட்டு தப்பினர். மூட்டையில் துண்டிக்கப்பட்ட கை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து, பைக் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 20, திருமங்கலம், வடக்குப்பாளையம் ரோஹித், 20, என, தெரிந்தது.
இருவரையும், போலீசார் கைது செய்து விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் ஒருவரை வெட்டி கொலை செய்து, உடலை புதரில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் கூறியதாவது:
புதுச்சேரி செல்லிப்பட்டைச்சேர்ந்தவர் ஆதிநாாயணன், 33; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கம் உடைய ஆதிநாராயணன், 15ம் தேதி இரவு பெற்றோரிடம் கோபித்து, கண்டமங்கலம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது, கண்டமங்கலம் - வானுார் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு தட்சணாமூர்த்தி, அவரது நண்பர் ரோஹித் இருவரும் மது அருந்தியுள்ளனர். அந்த வழியாக வந்த ஆதிநாராயணன் சாலையோரம் நிறுத்தி இருந்த பைக் மீது அமர்ந்துள்ளார்.
மது அருந்திய இருவரும் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஆதிநாராயணனை சரமாரியாக வெட்டினர். ஆதிநாராயணன் வலது கை துண்டாகி கீழே விழுந்ததுடன், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அவர் உடலை மறைத்துவிட்டு, துண்டிக்கப்பட்ட கையை வேறு எங்காவது வீச, சாக்குப்பையில் போட்டு எடுத்து வந்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.