ADDED : அக் 02, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 32. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு சிறுவந்தாடு - மடுகரை சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பெண்களை பார்த்து ஆபாசமாக பேசினர்.
தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் பொது மக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதே போல், சூரமங்கலம் நான்கு முனை சந்திப்பில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுப்பட்ட சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் 35, என்பவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.