UPDATED : அக் 07, 2026 01:20 AM
ADDED : அக் 07, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் பைக் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த சாத்தங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்த், 38; இவர், கடந்த 4ம் தேதி கடலுார், செம்மண்டலம் அரசு சேவை இல்லம் அருகில் தனது பைக்கை நிறுத்தினார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது பைக்கை காணாவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ‘சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பைக்கை குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் மணிகண்டன், 40; கஞ்சமநாதன்பேட்டை பாலசுப்ரமணியன், 43; ஆகியோர் திருடியது தெரியவந்து நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
