சின்னங்களை பேப்பரில் அச்சிட்டு வீசிய பா.ஜ., - காங்., ஆதரவாளர்கள் 2 பேர் கைது
சின்னங்களை பேப்பரில் அச்சிட்டு வீசிய பா.ஜ., - காங்., ஆதரவாளர்கள் 2 பேர் கைது
ADDED : ஏப் 10, 2026 06:44 PM
அரியாங்குப்பம்: கட்சி சின்னங்கள் அச்சிடப்பட்ட துண்டு பேப்பரை சாலையில் வீசிய, பா.ஜ., மற்றும் காங்., ஆதரவாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. மணவெளி ஓட்டுச்சாவடியில் அருகே நின்று கொண்டு, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்ட கட்சியினரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் இரு சக்கர வாகனம் மூலம், கை சின்னம் மற்றும் தாமரை சின்னத்தை அச்சிடப்பட்ட துண்டு பேப்பரை, வீராம்பட்டினம் அரசு துவக்கப் பள்ளி ஓட்டுச்சாவடி அருகே சாலையில் வீசி சென்றனர்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், வீராம்பட்டினத்தை சேர்ந்த ஸ்டாலின், 45; சின்ன வீராம்பட்டினத்தை சேர்ந்த கருணாகரன், 45; என்பது தெரியவந்தது. தேர்தல் விதி மீறல் சட்டம் 130 படி, கட்சி சின்னங்களை பிட் பேப்பரில் அச்சிட்டு வீசியதற்காக போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
