தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார் கண்ணாடி உடைப்பு இருவர் மீது வழக்கு 

 கார் கண்ணாடி உடைப்பு இருவர் மீது வழக்கு 

 கார் கண்ணாடி உடைப்பு இருவர் மீது வழக்கு 


ADDED : மே 20, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு ஊழியரின் கார் கண்ணாடியை உடைந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் அசோக், 55; இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணி செய்து வருகிறார். காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரது தந்தையை பார்க்க காரில் புறப்பட்டார். அப்போது, இவரது உறவினருக்கும், இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி செங்கேணி அம்மன் கோவில் வீதியில் நிறுத்திருந்த இவரது காரின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அசோக்கின் உறவினரான பார்த்திபன், தசேந்திரன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us