தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்

புதுச்சேரியில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்

புதுச்சேரியில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்


UPDATED : ஆக 06, 2026 08:59 PM

ADDED : ஆக 06, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 08:59 PM ADDED : ஆக 06, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வடக்கு பிரிவுக்குட்பட்ட மேல்நிலை நிர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி வடக்கு பகுதியான வைத்திக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் நாளை (8ம் தேதி)12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, முத்தியால்பேட்டை, சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உசி. நகர், வைத்திக்குப்பம், குருசுகுப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் ஆகிய பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலும், வடக்கு நகர பகுதியான நேரு வீதி, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, கடற்கரை சாலை, வாழைக்குளம், சின்னையாபுரம், குருசுகுப்பம், ராமகிருஷ்ணா நகர், திருவள்ளுவர் நகர், அப்துல் கலாம் நகர் ஆகிய பகுதியில் வரும் 10ம் தேதி 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us