தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இரண்டு பேர் மனு தாக்கல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இரண்டு பேர் மனு தாக்கல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இரண்டு பேர் மனு தாக்கல்


UPDATED : செப் 15, 2026 07:01 PM

ADDED : செப் 15, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 07:01 PM ADDED : செப் 15, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் நா.த.க., வேட்பாளர் உட்பட இரண்டு பேர் மனு தாக்கல் செய்தனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 வரை மனுதாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. கட்சி மற்றும் சுயேச்சைகள் சார்பில், மனு தாக்கல் செய்வதற்காக இது வரை 21 மனுக்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளன.

ஆனால், செப்., 14 வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. செப்.,15 ல் நாம் தமிழர் கட்சி சார்பில், தட்டாஞ்சாவடி திலகர் நகரை சேர்ந்த கார்த்திகுமாரி,40; மற்றும் மணவெளி ஆர்.கே. நகரை சேர்ந்த வசந்தி,48; சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்., காங்., தி.மு.க., இந்திய கம்யூ., மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us