/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருவரிடம் ரூ. 12.88 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
இருவரிடம் ரூ. 12.88 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
இருவரிடம் ரூ. 12.88 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
இருவரிடம் ரூ. 12.88 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : செப் 22, 2024 01:51 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் உட்படஇருவரிடம் 12.88 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமாலினி. இவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர், தனது வங்கி கணக்கில் இருந்து 6.88 லட்சம் ரூபாயை அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.
மேலும், பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்த மன்னார் என்பவரை தொடர்பு கொண்ட நபர், தனியார் நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறினார். அதை நம்பி, அந்த நிறுவனத்தில், லோனுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். பின், அந்த நபர், லோனுக்கான செயலாக்க கட்டணம் தர வேண்டும் என, கூறினார். அதை நம்பி அவர், 6 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதுகுறித்து, இரண்டு பேரும் கொடுத்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.