தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு


ADDED : மார் 12, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்,17 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கடந்த ஜனவரி 28ம் தேதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

அதில் புதுச்சேரி கலெக்டர் வல்லவன் புதுச்சேரியில் இருந்து கோவாவிற்கும், மற்றொரு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அருணாசலபிரதேச ஐ.ஏ.எஸ்.,அதிகாரி தல்வாடு புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் வல்லவன்,சவுத்ரி அபிஜித் விஜய் ஆகியோர் பணி ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் சேருவதற்காக புதுச்சேரி துறை பொறுப்புகளில் நேற்று விடுவிக்கப்பட்டனர். கவர்னரின் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us