ADDED : நவ 02, 2026 07:50 PM
புதுச்சேரி: பாரதி பூங்காவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்தவர் குறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ரூட்டி அழகுபெருமாள் குப்பைத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 48; இவர் நேற்று (நவ.,1) காலை 9.30 மணியளவில் புதுச்சேரி பாரதி பூங்காவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்துகிடந்தார். இது . குறித்து அவரது மனைவி அம்பிகா,38; புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
கடலுார் வேம்பூர் பகுதியை சேர்ந்த கார்த்திபன்,29; என்பவர் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தனியார் ஸ்வீட் ஸ்டாலில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உடன் அவரை அருகில் இருந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
