/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலை சேர்ந்த இருவரிடம் ஆன்லைன் டிரேடிங் என கூறி ரூ. 88.42 லட்சம் மோசடி சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
/
காரைக்காலை சேர்ந்த இருவரிடம் ஆன்லைன் டிரேடிங் என கூறி ரூ. 88.42 லட்சம் மோசடி சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
காரைக்காலை சேர்ந்த இருவரிடம் ஆன்லைன் டிரேடிங் என கூறி ரூ. 88.42 லட்சம் மோசடி சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
காரைக்காலை சேர்ந்த இருவரிடம் ஆன்லைன் டிரேடிங் என கூறி ரூ. 88.42 லட்சம் மோசடி சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
ADDED : அக் 29, 2024 06:12 AM
புதுச்சேரி: வெளிநாட்டில் இருந்து திரும்பிய காரைக்காலைச் சேர்ந்த நண்பர்கள் இருவரிடம், ஆன்லைனில் டிரேடிங் செய்யலாம்என ஆசை வார்த்தை கூறி ரூ. 88.27 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடிகும்பல் அபேஸ் செய்துள்ளது.
காரைக்கால் வரிச்சிகுடி குபேரன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். அதே பகுதி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. நண்பர்களான இருவரும் சமீபத்தில் வெளி நாட்டில் வேலை செய்து விட்டு காரைக்கால் திரும்பினர்.
கடந்த மாதம் இந்த இருவரையும் மர்ம நபர்கள் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் சேர்த்தனர்.
அந்த குழுவில் மீதமுள்ள 50 பேர், தாங்கள் ஆன்லைன் டிரேடிங் மூலம் முதலீடு செய்து ரூ. 1 கோடி லாபம் கிடைத்தது, ரூ. 50 லட்சம் லாபம் கிடைத்ததுள்ளது என தினசரி பதிவிட்டு வந்தனர்.
இதனை பார்த்த கணேசன், தட்சணாமூர்த்தி தாங்களும் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.
மர்ம நபர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் எவ்வாறு பங்கு சந்தையில் முதலீடு செய்வது என கேள்வி எழுப்பினர். உடனே ஒரு லிங்க் அனுப்பி அதில் தகவல்களை பதிவிட கூறினர். இருவரும் தங்களின் தகவல்களை பதிவிட்டதும், ஒரு மொபைல் ஆப் ஒப்பன் செய்து அதில் டிரேடிங் செய்வது தொடர்பாக பயிற்சி கொடுத்தனர். இருவரும் அந்த மொபைல் டிரேடிங் ஆப்பில் முதலீடு செய்ய துவங்கினர்.
கடந்த செப். 17ம் தேதி கணேசன் முதலில் ரூ. 4.5 லட்சம் முதலீடு செய்தார்.
தட்சிணாமூர்த்தி ரூ. 1.85 லட்சம் முதலீடு செய்தார். உடனடியாக பல லட்சம் லாபம் வந்தது போல் காண்பித்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக முதலீடு செய்ய துவங்கினர்.
ஒரிரு நாட்களில் கணேசன் ஆன்லைன் டிரேடிங் ஆப்பில் ரூ. 10 கோடி சம்பாதித்துள்ளதாக காண்பித்தது. தட்சணாமூர்த்தி அக்கவுண்டில் ரூ. 4 கோடி உள்ளதாக தெரிவித்தது.
இருவரும் பணத்தை எடுக்க முயற்சித்தனர். அப்போது, மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பணத்தை எடுக்க வேண்டும் என்றால், வருமான வரி, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என கூறினர்.
இருவரும் உறவினர்களின் நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தையும் மீண்டும் மர்ம நபர்கள் கூறிய லிங்க் மூலம் செலுத்தினர்.
மொத்தம் தட்சணாமூர்த்தி ரூ. 26 லட்சமும், கணேசன் ரூ. 62.15 லட்சம் பணத்தை செலுத்தியும், மொத்த பணத்தை எடுக்க முடியாமல் ஆன்லைன் டிரேடிங் ஆப் முடக்கம் செய்யப்பட்டது.
பணத்தை செலுத்தி ஏமாந்த இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.