/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை கல்லுாரி மாணவர் உட்பட 2 பேர் கைது
/
அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை கல்லுாரி மாணவர் உட்பட 2 பேர் கைது
அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை கல்லுாரி மாணவர் உட்பட 2 பேர் கைது
அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை கல்லுாரி மாணவர் உட்பட 2 பேர் கைது
ADDED : அக் 15, 2025 01:06 AM

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் பாரதி நகர், தென்னந்தோப்பில் நின்றிருந்த இரு வாலிபர்கள், போலீசாரை கண்டதும் ஒட முயன்றனர்.
சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில், அரியாங்குப்பம் மணவெளி முருகன் மகன் சதிஷ்,20; அரியாங்குப்பம், டோல்கேட் வெங்காயம் (எ) வெங்கடேஷன்,22; என்பதும், இவர்களில் சதிஷ், லாஸ்பேட்டை அரசு கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருவதும், சிறு வயதிலேயே கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்தவர் என்பதும், வெங்காயம் (எ) வெங்கடேஷ் மீது கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சா மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.