/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
/
இரு கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
இரு கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
இரு கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : டிச 13, 2024 06:10 AM

காரைக்கால்: காரைக்காலில் இருகூரைவீடுகள் எரிந்து ரூ.3லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேத வீடுகளை நாஜிம் எம்.எல்.ஏ.,பார்வையிட்டார்.
காரைக்கால் மதகடி தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தோமாஸ் அருள் திடல் பகுதியில் சுமார் 100க்கு மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. நேற்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூரைவீடு திடீரென தீபிடித்து எரியத்துவங்கியது.
வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
இருந்தும் அருகில் உள்ள தனம் என்பவர் வீட்டிலும் தீ பரவியது. மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் மழை நீர் மற்றும் சாலையில் ஓடிய மழைநீரை கொண்டு தீயை அனைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீமேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பிச்சியடித்தனர்.இந்த விபத்தில் ரூ.3லட்சம் மதிப்புள்ள டிவி,பிரோ,கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன்,தனம் ஆகிய இருவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.பின்னர் வருவாய்த்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
தீயணைப்துறையினரின் விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என தெரிவித்தனர்.