ADDED : பிப் 19, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை எதிரிலும், ஒதியஞ்சாலை அருகே இறந்து கிடந்த இருவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனை அருகே உள்ள புற்றுகோவில் அருகில் 45 வயது மதிக்க தக்க ஆண் நபர் நேற்று இறந்து கிடந்தார். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஜிப்மர் செக்யூரிட்டி அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார், இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோல், ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதி சின்ன சுப்ராயன் வீதி சந்திப்பில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

