/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு வார துாய்மை திருவிழா துவக்கம்
/
இரு வார துாய்மை திருவிழா துவக்கம்
ADDED : செப் 19, 2025 03:04 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி சார்பில் மத்திய அரசின் இருவார துாய்மை திருவிழா துவங்கியது.
பாரதி பூங்காவில் நடந்த துாய்மைப் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்து மரக்கன்று நட்டார். நகராட்சி கமிஷனர் கந்தசாமி, சுகாதார அதிகாரி ஆர்த்தி, உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர்கள் சுரேந்தர்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள், கீரின் வாரியர் சுகாதார ஊழியர்கள் பலர் துாய்மை இந்தியா திட்ட உறுதி மொழியேற்றனர்.
நெல்லித்தோப்பு சத்தியா நகர் பூங்காவை மறுசீரமைப்பு செய்து அமைச்சர் ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோர் துவக்கி வைத்து மரகன்று நட்டனர்.
மேலும் முத்தியால்பேட்டை சோலை நகர் பூங்கா துாய்மைப் பணியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., உப்பளம் கோலாஸ் நகர் பூங்காவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முதலியார்பேட்டை சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பூங்காவில் சம்பத் எம்.எல்.ஏ., உருளையன்பேட்டை முல்லை நகர் பூங்காவில் உதவி பொறியாளர் நமச்சிவாயம் துாய்மைப் பணியை துவக்கி வைத்தனர்.
துாய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 3 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வளமீட்பு பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணி வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.