/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பு கட்டையில் பைக் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி
/
தடுப்பு கட்டையில் பைக் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி
தடுப்பு கட்டையில் பைக் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி
தடுப்பு கட்டையில் பைக் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி
ADDED : மார் 10, 2024 06:11 AM

திட்டக்குடி ராமநத்தம் அருகே சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் இருவர் இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்த செல்லாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர்,39; மணி,55; கரும்பு வெட்டும் தொழிலாளிகளான இருவரும் நேற்று முன்தினம் மதியம் பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துாருக்கு கரும்பு வெட்டும் வேலைக்காக பைக்கில் புறப்பட்டனர்.
மாலை 4 மணிக்கு கடலுார் மாவட்டம் ராமநத்தம் மேம்பாலம் அடுத்த வெலிங்டன் வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி சாலை தடுப்புக்கட்டையில் மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.