தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதயநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

உதயநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

உதயநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : நவ 27, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தமிழக துணை முதல்வர் உதயநிதி 47வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.

மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், அகிலன் ஆகியோர் ஏற்பாட்டில், மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம் கிராமத்தில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் திறப்பு, தி.மு.க., கொடியேற்று விழா, பல்நோக்கு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

சம்பத், எம்.எல்.ஏ., வரவேற்றார். தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் குமார் முன்னிலை வகித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, நுாலகத்தை திறந்து வைத்து, தெருவோர வியாபாரிகளுக்கு தட்டுவண்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முகிலன், உத்தமன், ரெமிஎட்வின், தாமரைக்கண்ணன், தமிழ்ப்பிரியன், கிருபாசங்கர், பஜூலுதீன், சந்துரு, மாநில துணை அமைப்பாளர்கள் சிவா, ரமேஷ், ராமு, கமலக்கண்ணன், ஆரோக்கியராஜ், முகுந்தன், சுரேஷ், அருண், ராஜா, மிஷேல், சிலம்பரசன், கவிராஜன், சூரியா, முத்து, செல்வமணி, அருள்ராஜ், கவிநிலவன், இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், மூர்த்தி, லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செந்தில்வேலன், கோபால், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us