/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உல்லாஸ் மேளா கருத்தரங்கு புதுச்சேரி மாணவி சாதனை
/
உல்லாஸ் மேளா கருத்தரங்கு புதுச்சேரி மாணவி சாதனை
ADDED : பிப் 11, 2024 02:44 AM

புதுச்சேரி: மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., இணைந்து நடத்திய தேசிய அளவிலான இரண்டு நாள் உல்லாஸ் மேளா கருத்தரங்கு டில்லி தேசிய பால் பவனில் நடந்தது.
உல்லாஸ் என்பது 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி வழங்கும் பாரத கல்வியறிவுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்து, பேசினார். புதுச்சேரியில் இருந்து மாநில எழுத்தறிவு மையத்தைச் சேர்ந்த கருத்தாளர்கள் ராஜ்குமார், பாரதிராஜா, அரசு பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, கில்பர்ட் கிருத்தியன், சபரிநாதன், தன்னார்வ ஆசிரியர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரங்கினை பார்வையிட்ட அமைச்சர் புதுச்சேரி உருவாக்கியிருந்த ஐ. இ.சி., கற்றல் பொருட்களை பாராட்டி, உல்லாஸ் புத்தொளி சுருக்கப் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து இத்திட்டம் குறித்து நடந்த ஓவியப் போட்டியில் மாகே ஜவகர்லால் நேரு அரசு மேனிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி நியா தேசிய அளவில் முதல் இடம் பெற்றார். தொடர்ந்து புதுச்சேரி சார்பில், கரகாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.