/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகனங்களில் வியாபாரம் செய்ய தடைஉழவர்கரை நகராட்சி அதிரடி
/
வாகனங்களில் வியாபாரம் செய்ய தடைஉழவர்கரை நகராட்சி அதிரடி
வாகனங்களில் வியாபாரம் செய்ய தடைஉழவர்கரை நகராட்சி அதிரடி
வாகனங்களில் வியாபாரம் செய்ய தடைஉழவர்கரை நகராட்சி அதிரடி
ADDED : மார் 16, 2024 05:52 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இடங்களில், வாகனங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது என, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் செய்திக்குறிப்பு:
நகராட்சியின் பிரதான சாலைகளான வழுதாவூர் சாலை, விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் சாலை, லாஸ்பேட்டை உழவர் சந்தை சாலைகளில்,வாகனங்களை நிறுத்தி வியாபரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இவற்றை போக்க உழவர் கரை நகராட்சியில், கடந்தமாதம்சாலையோர வியாபாரிகள் குழுக் கூட்டம்நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்தைப் பகுதி மற்றும் வணிகப் பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தியும் சாலையோரமும்வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.
இதனைபோக்குவரத்து காவல்துறை, பொதுப்பணித்துறை, வட்டார போக்குவரத்து கழகம், எடை அளவைத்துறை மற்றும் நகராட்சி இணைந்து, மாதம் அல்லது வாரந்தோறும், வாகனங்களில் நடைபெறும் வியாபாரத்தை ஒழுங்குப்படுத்த, சம்மந்தப்பட்ட அரசு துறைகளின் கூட்டுக்குழு கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

