/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய உள்துறை செயலர் முதல்வருடன் சந்திப்பு
/
மத்திய உள்துறை செயலர் முதல்வருடன் சந்திப்பு
ADDED : ஜூலை 13, 2025 12:49 AM

புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர், முதல்வரை சந்தித்து பேசினார்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வருகை தந்த, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் நிதிஷ் குமார் வியாஸ், நேற்று மாலை சட்டசபையில் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்க சாமி சந்தித்து பேசினார்.
அப்போது புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் முக்கிய நலத்திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களை நடமுறைப்படுத்துவது குறித்து காலையில் நடந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் குறித்து கூறினார்.
அப்போது முதல்வர், பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு அளிப்பது குறித்து கலந்தாலோசித்தார்.
இச்சந்திப்பின்போது, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணைச்செயலர், ரவி ரஞ்சன், அரசு செயலர்கள் கேசவன், மொகமத் அஷான் அபித் உடனிருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் நிதிஷ் குமார் வியாஸ் இன்று காரைக்காலில் துறைமுகம், சுதேசி தர்ஷன் திட்டங்களை ஆய்வு செய்து விட்டு நாளை டில்லி திரும்புகிறார்.