பா.ஜ., வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 08:34 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். இவர், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலியார்பேட்டை ஆலய வீதி, போலீஸ் சந்து, போலீஸ் வீதி பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவரை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் ஓட்டு சேகரித்தார். அவர்களை பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். ஓட்டு கேட்கும்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியின் குறைகளை தெரிவித்தனர். இதனை கேட்ட வேட்பாளர் ஜான்குமார், நான் வெற்றி பெற்று இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்தார். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
