/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மத்திய நகர்புற அமைச்சகம் ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு முதல் கட்ட தவணை ரூ.5.5 கோடி விடுவிப்பு
/
புதுச்சேரிக்கு மத்திய நகர்புற அமைச்சகம் ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு முதல் கட்ட தவணை ரூ.5.5 கோடி விடுவிப்பு
புதுச்சேரிக்கு மத்திய நகர்புற அமைச்சகம் ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு முதல் கட்ட தவணை ரூ.5.5 கோடி விடுவிப்பு
புதுச்சேரிக்கு மத்திய நகர்புற அமைச்சகம் ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு முதல் கட்ட தவணை ரூ.5.5 கோடி விடுவிப்பு
ADDED : ஜன 28, 2025 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அம்ரூத் 2.0 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய உள்ளாட்சித்துறைக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ள.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மூலம் நகர்ப்புறங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்கான அடல் மிஷன் அம்ரூத் 2.0 திட்டம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் 2021-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் நீர்வள மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக 500 அம்ருத் நகரங்களில் நீர்நிலைகள், பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவது நீர்வள மேலாண்மையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டது.
அம்ருத் 2.0 திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புதுச்சேரியில், மொத்தம் 19 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தின்படி நீர் விநியோகத்தை மேம்படுத்துதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகளை புத்துயிர் பெறச்செய்தல் ரூ.150 கோடியிலான திட்டங்கள் மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் நகராட்சிகளில் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 5 கோடி திட்டங்கள் முடிந்துவிட்டது. மற்ற திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022--23 மற்றும் 2023--24 காலகட்டத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக நகர்ப்புற சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதற்காக, புதுச்சேரி உள்ளாட்சித்துறைக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, ரூ.8.4 கோடியை ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. மேலும் அதில் முதல் தவணையாக ரூ.5.5 கோடியை விடுவித்துள்ளது.
உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல் கூறும்போது, அம்ருத் 2.0 திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைத்தன்மையும் நீர் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதன் கீழ், மீண்டும் பயன்படுத்தப்படும் நீரால் 20 சதவீதம் நீர் தேவையை பூர்த்தி செய்தல், வருவாயற்ற நீரை 20 சதவீதத்திற்குள் குறைத்தல் மற்றும் நீர்நிலைகளை புதுப்பிப்பது போன்ற திருத்தங்கள் அடங்கும். இந்த இலக்கிலும் புதுச்சேரி உள்ளாட்சி முக்கிய மைல்களை அடைந்து சாதித்துள்ளது.
இந்த திட்டத்தை சிறப்பாக புதுச்சேரி உள்ளாட்சி துறை செயல்படுத்தியதால் இந்த ஊக்க பரிசு தொகை ரூ.8.4 கோடி அறிவித்து, முதற்கட்ட தவணை தொகையாக ரூ.5.5 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.