காலாப்பட்டு தொகுதி காங்., பிரமுகர், வேட்பாளர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
காலாப்பட்டு தொகுதி காங்., பிரமுகர், வேட்பாளர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 30, 2026 06:52 PM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த காங்., கட்சியினர் 2,000 பேர் வேட்பாளர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
காலாப்பட்டு தொகுதி, காங்., கட்சியை சேர்ந்த மறைந்த ஜோசப் மகன் டேனியல் மற்றும் வழக்கறிஞர் கதிர்வேல் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 2 ஆயிரம் பேருடன் வேட்பாளர் கல்யாணசுந்தரம் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
காலாப்பட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., -அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேட்பாளர் கல்யாணசுந்தரம் , கட்சியில் இணைந்த டேனியல் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பைக்கில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும், காலாப்பட்டு பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் நல்ல குடிநீர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி ஓட்டு சேகரித்தார்.
